
TEL OVED 5 STAR! – Tamil
TELL OVED 5 STAR என்பது ஓர் உலகளாவிய தெரிவிப்புச் சாதனம். இது நமது உலகளாவிய வழங்கல் சங்கிலியில் இருக்கும் அனைத்து பணியாளர்களும் சட்டவிரோதமான, நெறியற்ற, அல்லது முறை தவறிய மற்றும் பிற பணியிடப் பிரச்சினைகளைக் கொண்ட நடத்தையைத் தெரிவிக்க உதவுகிறது.
உங்களுக்குக் கவலைகள் இருக்கின்றனவா? உங்கள் மேற்பார்வையாளருடன் பேசுங்கள் அல்லது இருக்கும் தொழிற்சாலை குறைகேட்பு அமைப்பைப் பயன்படுத்துங்கள். உங்களுக்கு சௌகரியமாக இருந்தால், எந்தச் செலவும் இல்லாமல் நேரடியாக Oved 5 Star-இடம் தெரிவிக்கலாம், Oved 5 Star-இன் சமூக இணக்க நடத்தை நெறிமுறையின் ஏந்தவொரு (Social Compliance Code of Conduct) மீறக்கூடிய எந்த சம்பவத்தையும் அல்லது நடத்தையையும் நீங்கள் TELL OVED 5 STAR-ஐப் பயன்படுத்தி அநாமதேயமாகத் தெரிவிக்கலாம்.
இந்தக் குறைகேட்பு நிகழ்முறை அமலில் இருக்கும் ஒரு தொழிற்சாலை/சப்ளையர் குறைகேட்பு அமைப்புக்கு மாற்று அல்ல, ஆனால் இது நீங்கள் குறைகளைத் தெரிவிப்பதற்கான இன்னொரு வழி.
இரகசியக்காப்பு – எல்லாப் புகார்களையும் தகவல்களையும் இரகசியமாகக் கையாள எல்லா முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். Tell Oved 5 Star-இல் தெரிவிக்கப்படும் நிகழ்வுகள் அனைத்தும், சட்டத்தால் தடைசெய்யப்பபட்டால் தவிர, அநாமதேயமாகத் தெரிவிக்கப்படலாம்.
ஒரு குறையைத் தாக்கல் செய்ய, தயவுசெய்து இந்தப் படிவத்தை நிரப்பி TellOved5Star@ovedapparel.com-க்கு சமர்ப்பிகவும்